ஆஸ்த்மாவைப்பற்றிய இந்த நூல் குழந்தைகளையும் பெரியவர்களையும் தாக்கும் ஒரு பொதுவான நோயினைப் பற்றிய விக்யான் பிரசார் ஆரோக்கிய தொகுதியின் ஒரு பகுதியாகும். ஆஸ்த்மாவால் இறப்பு மிகவும் குறைவாக இருந்தாலும் அதன் பிணித்தன்மை மோசமான சமுதாயப் பொருளதார பின்விளைவுகளை ஏற்படுத்தி திடுக்கிட வைக்கும். பெரியவர்களுக்கு நிரந்தர அறிகுறிகள் இருப்பதால் ஆஸ்தமா கணிசமான தளர்ச்சியை ஏற்படுத்துவதோடு சமுதாய வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியவற்றில் தடையை ஏற்படுத்தும், நாட்டின் முன்னணி நிறுவனத்தில் பணியாற்றும் மருத்துவர், சாமானியனுக்கும் புரியும் மொழியில், நோயின் பல்வேறு வடிவங்கள் காரணமாயிருக்கக்கூடிய அல்லது தூண்டும் காரணிகளையும் அவற்றிற்கான சிகிச்சைகளையும் சமாளிக்கும் பல்வேறு வழிமுறைகளையும் விளக்க முயன்றிருக்கிறார். இந்த நூல் ஆதாரமான காரணிகளை அறிந்துகொள்வதற்கு உதவுவதோடு அல்லாமல், ஆஸ்த்மாவின் சிகிச்சை மற்றும் சமாளிப்பது குறித்த அடிப்படைத் தத்துவத்தை உணர்த்தவும் உதவும்.