பாரத தேசம்’ என்ற பாடலில் சிங்க மராட்டியரின் கவிதைக்கு ஈடாகச் சேரநாட்டு யானைத் தந்தங்களைப் பரிசளிப்போம்; வங்காளத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டு மத்தியப் பிரதேசத்தில் விவசாயத்தைப் பெருக்குவோம்; கங்கையாற்றுப் பகுதியில் விளையும் கோதுமைக்கு ஈடாக காவிரியாற்றுப் பகுதியில் விளையும் வெற்றிலையைக் கொடுப்போம் எனக் கூறுகின்றார்; மாநிலங்களுக்கு இடையேயான, மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தகர்த்துப் பாரத ஒற்றுமையை வலியுறுத்துகிறது இப்பாட்டு. மாநிலங்களுக்குரிய பொருண்மைகளைப் பாரத நாட்டின் உடைமைகளாக மாற்றுவதின் வழியே ஒரு தேசிய ஒற்றுமையை உருவாக்க வழிகாட்டும் வகையில் இப்பாட்டுப் பாடப்பெற்றது. இப்பாட்டின் ஏனைய பகுதிகளிலும், மொழிவாரியான மக்களுக்கு இடையே கொண்டும் கொடுத்தும் வாழ்கின்ற ஒரு பரிவருத்தனை உறவுமுறை சித்தரிக்கப் பெறக் காணலாம்.