தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் நடத்திய இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில் வாசித்து அளிக்கப்பட்ட பயன்மிக்க கட்டுரைகளின் தொகுப்பு இது.
இத்தொகுதியில் 1. மொழிபெயர்ப்பு: அன்றும் இன்றும் 2. படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பு; தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - ஓர் அனுபவப் பகிர்தல் 3. செல்வியும் நவீனமும்:மொழிபெயர்ப்புச் சவால்கள், 4. தமிழ் மொழிபெயர்ப்புத் தளத்தில் சிற்றிதழ்களின் பங்கு. 5. அரசியல் மொழிபெயர்ப்பும் மொழிமீட்பும் என்னும் ஐந்து கட்டுரைகள் தருகின்ற சுவையான செய்திகள், மிகக் கனமானவை தரமானவை.