ஆசிரியர் குறித்து:
கவிஞானி டாக்டர் அ. மறைமலையான். கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் தஞ்சாவூர்
மாவட்டம் உரத்தநாடு , கண்ணன்தன்குடியில் 08 .07 .1932 ஆண்டு ஐயா சு.து.
அய்யாசாமி மண்கொண்டார், முத்தம்மாள் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் .
இவர் 1953 ஆண்டு முதல் தனது எழுதுகோல்
பயணத்தை தொடங்கினார். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற பாவலர்.
பேரறிஞர் அண்ணா விருது, கலைமாமணி விருது பெற்றவர்.இவர் எழுதிய நூல்கள் 50
க்கு மேலே. இவர் தமிழக அரசிடம் இருந்து 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது" ,
அண்ணாவின் பெருவாழ்வு என்ற நூல்களுக்கு பரிசும், காட்டு மல்லிகை என்ற
நூலிற்கு அனைத்திந்திய வானொலி நாடக போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.
நிலவில் பூத்த நெருப்பு என்ற அறிவியல் புதினம், அன்னை தெரசா வாழ்கை வரலாறு,
'ஒரு தமிழ் பூ தவிக்கிறது' காவியம் கல்லூரி, பள்ளி மாணவர்க்கு பாட
நூல்களாக உள்ளது. போர் வாள், போல்ட் இந்தியா, நவமணி நாளிதழ்கள்
தலையங்க ஆசிரியர், Guiding Light ஆங்கில இதழின் ஆசிரியர், மக்கள் பாதை
மலர்கிறது என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார். உலக தமிழ் எழுத்தாளர்
பேரவை, மக்களாட்சி பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளின் தலைவர். மலேசியா,
சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு இலக்கிய பயணம் மேற்கொண்டு
ஆய்வுகள் செய்தவர்.