இந்திய மாமணி (பாரத ரத்னா) இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது.