திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.இந்த மின்னூலில் திருக்குறள் மூலமும் அதற்கு டாக்டர் மு.வரதராசனார் எழுதிய உரையும் படிப்பதற்கு ஏற்ற எளிய அழகிய வடிமைப்பில் தரப்பட்டுள்ளது.