இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பதுபோல் நமக்குத் தருகிறார். இவர் சென்று பார்த்த நாடுகளில் இயற்கையமைப்பு, வளம், எழிற்காட்சிள், வரலாற்றுச் சிறப்பு, கல்விமுறை, மக்களின் பண்பாடு. பழக்க வழக்கங்கள், விஞ்ஞான வளர்ச்சியில் அந்நாடுகள் பெற்றுள்ள சாதனைகள், இன்னும் இவை போன்ற பலவற்றை நமது உள்ளத்தில் பதியும் வண்ணம் தெள்ளிய நடையில் சித்தரிக்கின்றார்.