இனிய அன்பர் கோனூர் பெருமாள் அவர்கள் எழுதிய வன்னியூர் பொன்னன் என்ற கவிதை நாடகத்தைப் படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது.
இன்றைய தமிழுகிற்குக் கவிதை நாடகங்கள் நிறையத் தேவை. இந்த நாடகம் பெரும்பான்மையான நாடகங்களைப் போல் அல்லாமல் சமுதாய உணர்வுடன் எழுதப் பெற்றுள்ளது. மரங்களின் இன்றியமையாமையைக கிள்ளை வாயிலாக.
'' மழை தரும் பெருமை மரங்களால் தானே
மழையினால் மனிதர்கள் வளம் பெறலாமே
மரங்களைச் சாய்த்தால் வாழ்க்கை சாயும்
இதை ஏன் இவர்கள் அறிதல் இல்லை?''
என்று கூறும் வரிகள் பயனுடைய வரிகள். '' காடு வளர்ந்தால் நாடு வளரும்'' என்பது இந்த நாட்டுக்கு வழங்கியுள்ள அறிவுரை. மரங்களைக் காக்க நானூறு கவிகள் பாடுவாராம். நாடகத்தின் போக்கு அருமையாக உள்ளது. படிப்பினால் பயன் மிகும் என்று உணர்த்தும் பகுதி மிகவும் சிறப்புடைய பகுதி.