திரு ஆழிமலர் அவர்கள் நிறைய சிந்திக்கிறார். மொழி, தமிழர், ஆண் பெண் உறவு, மனித உணர்வுகள் தத்துவம் பற்றியெல்லாம் நிறைய சிந்திக்கிறார் சிந்தனை, நிறைய கருத்துக்களை அவருக்கு வழங்குகிறது. அக் கருத்துக்களை கவிதையாக மாற்றுகிறார். அவைகளில் சிலவற்றைத் தொகுத்து இப்போது கவிதைத் தொகுதியாக வெளியிடுகிறார். நீங்கள் வாசிப்பது அக் கருத்துக்களின் கவிதை வடிவங்களைத்தான்.