வயலின் என்ற பெயரில் வழங்க்ப்படும் இசைக் கருவி கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்திலிருந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அந்த நாளில் இது இன்றைய மாண்டலின் என்ற இத்தாலிய இசைக்கருவியினை ஆதாராமாகக் கொண்டு செய்யப்பட்டு இருந்ததாகவும். பின்னர் வடிவம் மாற்றம் பெற்று பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் பெற்று சுமார் கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இன்றைய வடிவத்தினை அடைந்தது என்று கூறுவர்.