நாடு நலம் பெற இப்படிப்பட்ட மனிதர்கள்தாம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே நாங்களும் மனிதர்கள்தாம் என்ற தலைப்பைக் கொடுத்துள்ளார் நண்பர் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. இவர் ஒரு பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை. ஒழுக்கம்- கட்டுப்பாடு- கள்ளுண்ணாமை- காலந்தவறாமை போன்ற நன்னெறிகளை மாணவர்களுக்கு போதித்து வந்த ஆசிரியர்.