இருபத்தொன்றாம் நூற்றாண்டு நடைபெறும் இக்காலத்தில் மனிதனை மனிதன் நேசிக்கும் மனோபாவம் குறைந்துகொண்டே இருக்கிறது.ஆன்றோருக்கும் சான்றோருக்கும் அன்றாடம் இந்த ஐயம் எழுந்துகொண்டுதான் உள்ளது. இன்னமும் மனிதநேயம் சாதி நல்லிணக்கம், மத நல்லிணக்கம் மற்றும் பல நுணுக்கமான செயல்பாடுகள் மூலம் மலர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்காங்கு நான் பார்த்தது கேட்டது படித்தது என் மனக்கண்முன் மனிதநேயமாய் தெரிந்தது இங்கு மனித நேயக் கதைகளாய் மணம் பரப்ப வந்துள்ளது.