மகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல் இது. அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைப்போராட்ட அனுபவங்கள், காந்தியடிகளின் இந்திய விடுதலைப்போருக்கான யுக்திகளை வகுக்க உதவீன. அவர் அறிவித்து வழிகாட்டி நடத்திய போராட்டங்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடு நடுங்கச் செய்தன. அவரிடம் காணப்பட்ட சத்திய வேட்கை. அஞ்சாமை, உண்மை, நேர்மை மனஉறுதி நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய பண்புகளாகும்.
யாவற்றுக்கும் மேலாக தமிழ்மொழியைக் கற்க காந்தியடிகள் மேற்கண்ட முயற்சிகள் தமிழ் வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் செய்தி எனலாம்.
அரிய பல தகவல்களின் களஞ்சியம் இது.