குறிப்பிட்ட துறைகளில் வழங்கும் சிறப்புச் சொற்கள் கலைச்சொற்களாகும். இக்கலைச் சொற்கள் பொருட்செறிவு மிகுந்தவை. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் , பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகளிலும் கலைச்சொற்கள் மிகுதியாக உள்ளன. இக்கலை சொற்களின் , பொருள் அறிந்தாலன்றி இலக்கணத்தை அறிய இயலாது. எனவே, இலக்கணத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் முயற்சியில் சொல்லதிகாரக் கலைச் சொற்களைத் தொகுக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. கலைச்சொற்கள் அனைத்து வகையான துறைகளிலும் காணப்படுகின்றன. ஆனால் அவை சரியான முறையில் தொகுக்கப்படவில்லை. மேலும் அக்கலைச்சொற்களுக்குச் சரியான விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை. பிற துறைகளை நோக்கும் போது இலக்கண, இலக்கியம் சார்ந்த கலைச்சொற்கள் பொகுக்கப்பட்டு விளக்கம் கொடுப்பது முறைவாக உள்ளது. இலக்கணத்தைப் புரிந்து கொள்ள, இலக்கண ஆய்வு மேற்கொள்ள கலைச்சொல் விளக்கம் இன்றியமையாத ஒன்றாகும். இந்தநோக்கில் இலக்கணத்தினை யாவரும் எளிமையாக உணர்ந்து கொள்ளவைக்கும் முயற்சியில் விளைந்ததே இந்த ஆய்வு நூல்.
- பதிப்பகத்தார்.