எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஹாஸ்யம், சிரிப்பு. நையாண்டியுடன் பேசுவார். சீரியஸாகப் பேசும் போது கூட, அதில் ஒரு நகைச்சுவை உணர்வு இழைந்தோடும். எப்போதும் இவர் திருமண் இட்டுக் கொண்டிருந்தாலும், ஜாதி மதம் பார்த்ததில்லை. அதே போல எழுத்தாளர்களிடமும் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை. தன்னைவிட வயதில் மிகவும் சிறியவர்களுக்குக்கூட இவர் மரியாதை கொடுப்பார். இப்படிப்பட்ட உயர்ந்த பண்பு இவரிடம் இருந்தது. இவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; ஒரு நல்ல மனிதரும் கூட.