மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கு. இராமலிங்கம் அவர்கள் சென்னை, ஸ்டான்லி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரிகளில் முப்பது ஆண்டுகட்கும் மேலாகா சிறப்பாகப் பணியாற்றி பெரும்புகழ் பெற்றவர். மேலும் அவர் மருத்துவப் பேராசிரியர் என்ற முறையில் விஞ்ஞான நோக்குடன் ஆராய்து எழுதிய "நூறாண்டு வாழ்வோம்" என்னும் இந்நூலை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். தொடர்ந்து படித்திட ஆர்வத்தைத தூண்டும்படி அமைந்துள்ளது இந்நூல். சுவையான செய்திகளை, படிப்போர் உள்ளம் கவரும் வண்ணம் எழுதியுள்ளார்.
இளமை என்பது என்ன, முதுமை எப்போது தோன்றுகிறது. பலவித நோய்கள், அவற்றை, நீக்கும் முறைகள், மருந்துகள், அறுவை சிகிச்சைகள் என நோயற்ற நல்வாழ்விற்கான வழிமுறைகளை இந்நூலில் காணலாம்.