கற்பனையில் நீந்திக் கதையைப் பிடிப்பதை விட நடைமுறை வாழ்க்கையில் நடந்தும் தடுக்கி விழுந்தும் விழ வைக்கப்பட்டதுமான அனுபவங் களை வைத்து இலக்கியம் படைப்பது என்பது எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தொடக்க காலத்தில் பெரும்பாலான படைப்பாளர்களின் படைப்புகளில் கற்பனைதான் விஞ்சி நிற்கும்.
எவ்வளவுதான் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மற்றவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதினாலும் பாதிக்கப்பட்டவரே எழுதும் போதுதான் உண்மையான வலியை உணர முடியும். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ஒருவர்தான் ஈழ எழுத்தாளர் தெணியான் (இயற் பெயர்: நடேசு). கல்வி நிறுவனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றிய படைப்பாளர் தெணியான் சாதியத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக எழுதுகோலைப் பிடித்தவர். இடதுசாரிச் சிந்தனையால்தான் வேறுபாடு களைக் களைய முடியும் என்று நம்பியவர்