உன்னைப்போல் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் ஒன்று கூடிப் பேசி, இளைஞர்களுக்கு இந்துமதத் தத்துவங்களில் நம்பிக்கை உண்டாகும்படி போதிக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கையின் பின்னணி வித்தியாசமாக இருந்தாலும் இந்துமதத்தின் நல்ல கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது நல்லது என்று நினைக்கிறாய். அதனால் உன்னைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று வலியுறுத்திச் சொன்னார். எவ்வளவு ஆழ்ந்த, உயர்ந்த மதிப்பீடு அது? இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்க நாம் போடும் திட்டங்கள் பலவற்றிலும் இதைப் பின்பற்றலாமே?