செந்தமிழ் வாரிதி முனைவர் இரா. செல்வக்கணபதி அவர்கள் உலகத் தமிழர்கள் உவந்துபோற்றும் தமிழறிஞர். சைவச்செங்கதிர், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர். சைவசமயக் கருவூல மொன்றை அரிதின் முயன்று தயாரித்துள்ளஇவர், தருமையாதீனக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சங்க இலக்கியம், சமய இலக்கியம், இதிகாசங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றில் ஆழங்கால் பட்ட அறிஞர்.