இலக்கிய உலா ' என்னும் இந்நூலினை மதுரை காமராசர் பல்கலைக்கழக இலக்கியத் திறனாய்வுத்துறைத் தலைவர் டாக்ட, ம. திருமலை அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். நூலில் முத்தான பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை படிப்பவர் மனம் கவரும் வண்ணம் பல நூல்களின் சான்றுகள் பதுந்து காணப்படுகின்றன. இந்த உலக இன்பங்களின் மூது வைக்கும் பற்றினால் வளர்கின்ற ஆணவம் தன்னையும் பிறரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. மனிதப் பிறவியின் வெப்பத்தினால் ஏற்படும் வேகத்தைத் தவிர்க்கும் சக்தியே இறைசக்தி என்ற பல உண்மைகளை மாணிக்கவாசகலின் சிவப்புராணம் என்ற கட்டுரை வகுத்துக்காட்டுகிறது.
சும்மா இருத்தல், உள்முகச் சிந்தனைகளை வளர்த்தல், தன்னை அறிதல் முதலியவற்றின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்று அகப்பேய்ச்சித்தர் கூறும் உண்மைகளை இந்நூலின் எட்டாம் கட்டுரை உரைக்கிறது.இந்நூலின் இடம் பெற்றுள்ள பத்துக்கட்டுரைகளும் அறிஞர்களின் அறிவுக்கு விருந்தாகும் சிறப்புப் பெற்றிருப்பதால் இந்நூலை வெளியிட்டு எமது பதிப்பகம் வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறது.
- பதிப்பகத்தார்.