சாதாரண குடும்பத்தில் பிறந்த சராசரி மனிதனா நீங்கள்? வாழ்க்கையை இப்படியே
கழித்து விட வேண்டியது தானா? என்று வருந்தி, விரக்தியடையும் வேதனை மனிதனா
நீங்கள்? மற்றவர்கள் உயரும் வேகத்தைக் கண்டு மலைத்து நிற்கும் மனிதனா
நீங்கள்? சாதனையாவது? நாம் செய்வ தாவது? ஆளை விடுங்கப்பா என்று ஒதுங்கிக்
கொண்டு வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் மனிதனா நீங்கள்? எதைச் செய்தாலும்
இடைஞ்சல் தானே எதிர்ப்படு கிறது என்று பெருமூச்சு விடுபவரா நீங்கள்? எனக்கு
மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காய் சோதனை என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்?
நமக்கு ஏது நாளை? என்று நம்பிக்கையைத் தொலைத்து விட்டவரா நீங்கள்? கை
தூக்கி விட ஆளில்லையே என்று கண்ணைக் கசக்குபவரா நீங்கள்? எந்தப் பாதையில்
போவது என்று இன்னும் தீர்மானிக்க முடியாமல் தடுமாறுபவரா நீங்கள்? நாளை
எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கூட காணத் தெரியாதவரா நீங்கள்?
வாருங்கள்.உங்களுக்காகவே எழுதப்பட்டது தான் இந்த நூல்.