தலைவர்
கலைஞர் அவர்களின் முத்தமிழ் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு இளைய கலைஞர்
தளபதி அவர்களின் பின்னால் அணிவரிசையில் நிற்கும் ஈரோடு இறைவனின்
எழுத்துக்களில் 'ஈரோட்டுப் பகுத்தறிவு பளிச்சிடக் காணலாம்.
கலைஞர் மற்றும் பாரதிதாசன் கவிதைகளின் தாக்கத்தினால் கவிதையின்பால்
காதல் கொண்டு எழுதத் தொடங்கியவர். கவிதை, கதை கட்டுரைகளில் தனித்தனி நடை
போட்டு முத்திரை பதித்து வரும் ஈரோடு இறைவனின் தந்தையார் திரு கைவல்யம்,
தாயார் திருமதி மங்கையர்க்கரசி, துணைவியார் திருமதி மு.சுகந்தி, இதுவரை
ஈழத்தில் கண்ணீர் சாலை, தமிழால் முடியும், காதல் மீது விழுந்த இதயம்,
காதில் ஒரு காதல், கண்ணாடி முகங்கள், விழியோரம் காதல், காற்றுக்குள் யாழும்
குழலும் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், மலர்களில் மழை, கதம்பம் ஆகிய
சிறுகதைத் தொகுப்புகளும், தொப்புள்கொடி உறவு என்னும் நாவலும், இன்பம்
இலவசம் என்னும் கவிதை நாவலும் படைத்து வாசகர்களின் உள்ளங்களில் குடி
கொண்டிருப்பவர்.