இந்நூலில் வரைப்பட்டிருக்கும் சிறுகதைகள் எல்லாமே மன்னர் காலத்துக்கு அழைத்துச் செல்லும் சிறப்புடையவை. திடீர் தேவதைகள், பறக்கும் குதிரைகள், மாயக்கனிகள், எனப் பல் அரிய பெரிய மாயத்தோற்றங்கள் கண்முன்னே நிகழ்ந்த வண்ணமிருக்கும்; இது அக்காலத்து மாயஜாலத் திரைப்படம் பார்க்கும் பிரமிப்பை உருவாக்கும், வீடியோ கேம், மற்றும் விளையாட்டுச் சாதனங்களில் பொழுதைக் கழிக்கும் மானாக்கர்க்கு இந்நூல் அறிவார்ந்த ரகசியங்களையும், மர்மங்களையும், பிரமாண்டங்களையும் கொண்டுவந்து சிந்தனையின் கதவினைத் திறந்து அறிவைப் பட்டைத் தீட்டிச் செல்லும்.