அற்புதம், அதிசயம்... இவற்றின் மேலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா... என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையிலும் அற்புதமெல்லாம் நிகழும் என்கிற உறுதியோடு இருக்கிறீர்களா? அப்படியென்றால், நிச்சயம் அது நடக்கும். அப்படி நடக்கப் போகும் அதிசய நிகழ்வுகளுக்கு அடிநாதமாக இருப்பது ஏதோ ஒரு மாய மந்திர சக்தி அல்ல... உங்களின் நம்பிக்கை. அது, நம்மை எப்போதும் கைவிடாது. அந்த உண்மையை வெகு அநாயசமாக உணர்த்தும் கதை இது.