தாமஸ் ஆல்வா எடிசனை ஊரும் உலகமும் நன்கு அறியும். ஒளி விளக்கைக் கண்டுபிடித்து இருள் நீக்கிய மாபெரும் சாதனையாளர் என்று மட்டுமே அவர் அறிமுகம் செய்யப்பட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் மனித குலத்துக்குக் கிடைத்த மாபெரும் அறிவியல் நன்கொடை, அறிவியல் என்பது அதிசயங்களை நிகழ்த்திக் காட்டவே என்ற கருத்தோட்டம் நிலவிய காலத்தில், அறிவியல் என்பது நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத்தான் என்பதை முதன் முதலில் உணர்த்தி யவர் தாமஸ் ஆல்வா எடிசன். கண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக வும். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராகவும் விளங்கினார் அவர்.
ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கு அவர் சொந்தக் காரர் என்றபோதிலும், மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்ற கொள்கையுடன் தனது கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தார். அவர் தனது வாழ்க்கையின் மூலம் இளைய தலைமுறைக்கு துணிச்சலையும் தன்னம்பிக்கை யையும் ஊட்டினார். அத்தகைய சாதனையாளரின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவது இந்நூல். இதனை எளிய முறையில் எழுதி அறிய படங்களைச் சேகரித்து சிறந்த நூலாகத் தந்துள்ளார் எம்.ஏ. பழனியப்பன். எங்கள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்படும் இந்நூலுக்கு வாசகப் பெருமக்கள் வழக்கம் போல் தங்களது பேராதரவை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.