திருவிறையை வணங்கியும் திரு நபியைப் போற்றியும் ஆரம்பம் செய்கின்றேன். இந்நூலுக்குக் கருத்துரைக்க அடியேனுக்கு எவ்வித விலிமையும் இல்லை என்பதை முன் கூட்டியே கூறிக் கொள்கிறேன். காரணம் மகாமதி செய்குத் தம்பி பாவலர் அவர்களது ஆற்றலைப் பிடிக்க இன்னும் மனிதன் பிறக்கவில்லை என்றே கருதுகிறேன். அவர்கள் மாபெரும் சக்தி பெற்றவர் தமிழுலகம் நன்கறியும்.அவர்களைப் பற்றி கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை முன்னிலையில் பாடியது.