இயற்கை
அன்னையின் ஆசியால் உலகம் பரந்து விரிந்து கிடக்கின்றது. இயற்கை அன்னையின்
சீதனங்களான மலைகள், மரங்கள், செடி, கொடிகள், மலர்கள், காய்கறிகள், பழங்கள்
என அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கை அன்னை கொடுத்த இக்கொடையினால் அன்றைய
ஆதிமனிதன் எந்த நோய் நொடியுமின்றி நீண்ட நாட்கள் நலமுடன்
வாழ்ந்திருக்கிறான். குலசேகரன்பட்டினம் எனும் ஒரு குறும்பட்டினத்தில்
தென்னங்கீற்று, பனைக்கீற்று, வேப்பங்கீற்று என கடற்கரை காற்றும் தாலாட்டும்
ஓர் அழகிய சோலையிலே 'இயற்கை வாழ்வு மையம்' அமைத்து, செயற்கை மருத்துவம்
வியக்கும் வண்ணம் இயற்கை உணவின் மகிமையையும் அறிவியல் உண்மையையும் உலகுக்கு
உணர்த்தி வருகிறார் இயற்கை உணவு நிபுணர் பெரியவர் மூ.ஆ. அப்பன் ஐயா
அவர்கள்.