
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Vantha naal muthal…!
Free shipping over ₹500
ஆயிரம் வயலின்களும், லட்சம் புறாக்களும், கோடி பூக்களுமான காதல்களின் காலம் எல்லோருக்கும் இருக்கும். அப்படிக் கடந்து வந்த உணர்வும் உருவமும்தான் இந்த 'வந்த நாள் முதல்!' காதல் என்கிற உணர்வும் காட்சி என்கிற உருவமும் இணைந்த தரிசனம் இந்தப் படைப்பு.
காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. ஆனால் காதல் தரும் நினைவுகள் மட்டும் உள்நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தேநீர் கசப்பு மாதிரி உள்ளத்தின் அடித்தட்டில் தங்கிவிடுகிறது. எல்லோருடைய இதயத்தின் ரகசிய அறைகளில் வாழும் தேவதைப் பெண்களின் கதைகளை கவிதையாக்கிருக்கிறார் செழியன்.
பேருந்துகளில், கோயில்களில், திருமண வீடுகளில், தட்டச்சு வகுப்புகளில்... என ஏதோ ஒரு சந்திப்பில் கண்களால் பேசி, மனதால் கலந்து, கனவுகளால் கனிந்து, மௌனத்தையே சாட்சி வைத்து பிரிந்துபோன காதல் தருணங்கள் யாருக்கு இல்லை..? இப்படி ஒருவருக்கல்ல... ஒரு கோடி காதலர்களுக்கு நேர்வதுதான் செழியனின் இந்தக் காதல் வரிகள். சந்திக்கிறபோது கிடைக்கிற சந்தோஷமும் பிரிகிறபோது பெறுகிற வலிகளும்தான் காதலை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் உணரலாம்.
இந்தத் தொகுப்புக்கு விழியும் மொழியும் செழியன்தான். கவிதையே காட்சியாய் விரிவதும், புகைப்படமே கவிதையாய் எழுவதும் இவரது தனிச் சிறப்பு. காரணம் கவிஞர், எழுத்தாளர், இசை பயின்றவர், புகைப்பட நிபுணர், ஒளிப்பதிவாளர் என பலமுகங்கள் கொண்டவர் செழியன்.
'வந்த நாள் முதல்...' தொடராக விகடனில் வந்தபோது, அந்தக் காதலர்களுடன் பயணித்த லட்சக்கணக்கான காதலர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி. பதிப்புத் துறையில் சாதனைகளைப் படைத்துவரும் விகடன் பிரசுரத்தின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கும் நீங்கள் பேராதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.