பரிபாலில் மொத்தம் எழுபது பாடல்களைக்கொண்டது. ஆனால் நமக்குக் கிடைத்துள்ளவை இருபத்திரண்டு பாடல்கள் மட்டுமே. பரிபாடலில் முதலாவது , இரண்டாவது , மூன்றாவது , நான்காவது, பதின்மூன்றாவது, பதினைந்தாவது ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து எட்டு ஒன்பது பதினான்கு பதினேழு, பதினெட்டு பத்தொன்பது, இருபத்தொன்றாவது ஆகிய எட்டுப் பாடல்களும் செவ்வேளைப் பற்றிப் பாடப்பெற்றவை, ஆறு ஏழு, பத்து பதினொன்று பன்னிரண்டு , பதினாறு , இருபது , இருபத்திரண்டு ஆகிய எட்டுப் பாடல்களும் வையையைப் பற்றிப் பாடப்பெற்றவை.