திருமதி. ரமணிசந்திரன் எழுத்துக்களை மிகுந்த ஈடுபாட்டோடு படிக்கும் வாசகர்கள். வாசகிகள் தமிழ் பேசும் உலகெல்லாம் பல்லாயிரக்கணக்கில் பெருகி வருகிறார்கள். தினமும் ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிகின்றன. அதிலே மலேசியாவில் உள்ள மதிப்பிற்குரிய வாசகி ஒருவரின் கடிதத்தைக் கீழே தருகிறோம். "நம் வாழ்க்கையில் மிக அவசியமானது அமைதி, மகிழ்ச்சி, இவை இரண்டும் உங்கள் புத்தகங்களில் எனக்குக் கிடைக்கின்றன. என்னிடம் நீங்கள் எழுதிய ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தையும் குறைந்தது 100 தடவையாவது படித்திருப்பேன். படித்து முடித்ததும் மனதிற்கு ஒரு உற்சாகம், மகிழ்ச்சி பொங்கி வழியும். என் கணவர் கேட்பார் "அப்படி என்னதான் இந்தப் புத்தகத்தில் இருக்கு; இப்படி சிரிச்சுக்கிட்டே படிக்கிறியே" என்று. பதில் கூறினால் அவருக்குப் புரியாது. திரும்பத் திரும்பப் படிக்க போர் அடிக்கலியான்னு கேட்பார், எனக்கு ஒரு தரம் அடித்தது இல்லை. இது நிஜம் கூட. இவ்வளவு அருமையான புத்தகங்களைத் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றியும் கூட!" இப்படிப்பட்ட எண்ணற்ற வாசகிகள், வாசகர்களின் பாராட்டுக்களுக்கு எங்கள் நன்றி. வாசகிகள், வாசகர்களின் பாராட்டை மேலும், பெறும் வகையில் 'உன்னைத் தழுவிடிலோ த் கண்ணம்மா' என்ற அருமையான நாவலைத் திருமதி. ரமணிசந்திரன் அவர்கள் தந்துள்ளார்கள். படித்து மகிழுங்கள், கருத்தை எழுதுங்கள்.