முதுபெரும் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இர. ஆலால சுந்தரம் அவர்கள் பல நாடுகளின் வரலாறுகளை நூல்களாகப் படைத்திருப்பது போல ஜப்பானின் வரலாற்றையும் (1800 முதல் 2001 முடிய) படைத்துள்ளார்.
நான்கு பெருந்தீவுகளையும் எணற்ற தீவுக்கூட்டங்களையும் கொண்ட ஜப்பானின் அமைவிடத்தைக் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையோர் மங்கோலிய இனத்தவரே என்பதையும் அறிவித்துள்ளார்.
ஜப்பானின் தொடக்ககால ஆட்சிமுறை, ஐரோப்பியருடன் கொண்ட உறவு, புதிய ஜப்பான் உருவாதல், மேற்கொண்ட அரிசல் அமைப்பு முறை போன்வற்ற்றோடு அவ்வப்போது பிறநாடுகளுடன் போரிட்ட காரணத்தையும முடிவையும் நன்கு விவரித்துள்ளார்.