தமது மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை காப்பதற்கு தொடர் போராட்டங்களை சந்திக்கும் ஓர் இனத்தின் பிரதிநிதிகள் மலேசிய வெளி முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். ஒரு நகரம், தங்கள் மீது நடத்தும் பண்பாட்டு வன்முறைகளை தவிர்க்க முடியாமலும், ஏற்க இயலாமலும் தவிக்கும் மனங்களின் குரலாக எழுத்து இங்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.