தேசங்களின் எல்லைகள் தகர்ந்து, விரிந்து அலை மோதிக்கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்பதற்கு கா. பாலகணேசனின் கவிதைகள் உதவும். குறிப்பாக ஈழத்தின் போர்ச்சூழலையும் புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருட்களாகக் கொண்டுள்ளன. இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம்பெயர்ந்தோருக்கும் தாயகத்திற்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்பு துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.