புழுதிச் சாம்பலில் கால்கள் அளைந்துகொண்டிருந்தாலும் எப்போதும் இவர் கவிதை மனம் தரிசிப்பது ஒளிந்துகொண்டிருக்கும் ஒருவனுடைய சாயலையே, இயல்பாக உருக்கொள்ளும் புதுமை கூடிய படிமங்களும் விவிலிய நடையின் ஆரோக்கியமான பாதிப்பும் கொண்ட கவிதை மொழியும் இவரது தனித்தன்மை எனலாம். இந்தத் தொகுப்பில் பாலை நிலவனின் 'கடல் முகம்', 'சாம்பல் ஓவியம்' தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளும் 2003 ஆம் ஆண்டுக்குப் பின் எழுதிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.