நீரின் உருமாற்றம் பெண்ணுடலின் சலனங்களுக்குப் பொருந்துகிறது. ஆணின் மாற்றமில்லாத் தட்டையான உடலைவிட பெண்ணுடல் மிகவும் உருமாற்றமுடைய உற்பத்தி ஆற்றல் பெற்ற உடல். உயிரினங்கள் நீரை ஆதாமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. பெண் குருதி நீரால் ஒரு புதி உயிரை உருவாக்கி கர்ப்ப நீரில் மிதக்கவிடுகிறாள். அச்சிசு அவளிடமிருந்து பிரிந்தவுடன் முலை நீர் ஊட்டி அந்த உடலுக்கு உரமேற்றுகிறாள். இந்த அற்புதம் நீருக்கும் பெண்ணுலக்கும் மட்டும் உரியது. பெண்ணின் மன, உடல், உணர்வெழுச்சியும் அறிவெழுச்சியும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப மழையாகவோ, அருவியாகவோ, காட்டாறாகவோ, நதியாகவோ. கடலாகவோ, குணமாகவோ மாறிவிடுகின்றன. என்னுடைய நான் நீர். நீருடைய நான், நான்.