நவீன வாழ்வு மொழியின் மீது திணித்துள்ள பதற்றங்களிலிருந்து தமிழ்ச் சிறுகதையை விடுவிப்பதற்கு முற்படும் ஒரு புதிய தலைமுறை தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாகியுள்ளது. முன்னெப்போதைக் காட்டிலும் சிக்கலானதாக, அடர்த்தியானதாகத் தோற்றமளிக்கும் நவீன வாழ்வின் பன்முகக் கூறுகளை அவற்றின் முழுமையான பரிமாணங்களில் வெளிப்படுத்துவதற்கான ஒரு மொழியைக் கண்டறிவதற்கு இந்தப் புதிய தலைமுறை திணறுகிறது. இந்தத் திணறல்தான் புதுயுகத் தமிழ்ச் சிறுகதையின் பலமாகவும் அடையாளமாகவும் இருக்கிறது.