தீவிரவாதி, பத்திரைகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் வதைபட்டு வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதையின் சுல்தான்; அக உணர்வுகளைப் பிரபஞ்ச அனுபவங்களாக மாற்றிய உலக சஞ்சாரி; எண்ணவோட்டங்களின் அழுத்தத்தால் மனப்பிறழ்வின் ஆழ் வெளிகளுக்குள் தூக்கியெறியப்பட்ட பஷீர் எனும் மனம், பல்வேறு கால நகர்தல்களினூடே பயணப்பட்ட போது புனைந்த 16 சிறுகதைகள், நம்பூதிரியின் கோட்டோவியங்கள், எம்.டி. வாசுதேவன் நாயர், எம்.என். விஜயன் கட்டுரைகள், அபூர்வப் புகைப்படங்கள் ஆகியவையடங்கிய தொகுப்பு.