'பெண் எழுச்சி இறையியல் பார்வையில் பெண்ணிய விவிலியப் பொருள்கோளியல்' என்ற தலைப்பில் ஜெயசீலி முறைப்படி, மேற்கொண்டு இயற்றிய ஆய்வு ஏடுதான் இங்கு 'பெண்ணியப் பார்வையில் விவிலியம்' என்ற நூலாக எளிதான வாசிப்பிற்கு உகந்தவாறு வெளியாகிறது. தமிழில் கிறித்தவ இறையியல் துறையிலிருந்து வீறிட்டெழும் முதல் பெண்குரல் என்ற முறையில் கவனிக்கப்பட்ட வேண்டிய நூல் இது.