எளிமைஆன வார்த்தைகளாலும் புதிய படிமங்களாலும் நமது அன்றாட வாழ்க்கையை மாற்றிவிடுகிற ரசவாதம் ஆகர்ஷியாவின் கவிதைகளில் கிடைக்கிறது. பிரிவு, நேசம், யுத்தம், இழப்பு, உள்ளடங்கிய வேட்கை, சிறிய இன்பங்கள், பெரிய துன்பங்கள் என வாழ்வின் எல்லாப் பரிமாணங்களுமே நுட்பமாக இவரது கவிதைகளில் பதிவு பெறுகின்றன. பெயருக்கேற்றபடி ஆகர்ஷிக்க வைக்கும் கவிதைக் குரல் இவருடையது.