தமிழில் இதற்கு 'ஒவ்வாமை' என்று பொருள். நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள், சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் தெரு அல்லது வீட்டுத்தூசி, மேலே தடவிக் கொள்ளும் களிம்புகள், பவுடர், சென்ட், சோப்பு, அணியும் உடைகள், நகை மற்றும் மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றின் விளைவாக உடலில் அசாதாரணமாக உண்டாகும் ஒரு வித உடல் மாறுதலை 'அலர்ஜி' என்று சொல்லாம். இதுநாள் வரை உடலுக்கு ஒத்துப் போகும் அனைத்தும் திடீரென ஒத்துப் போகாமல்போதும் 'அலர்ஜி' யாகும்.