பாரதநாடு நம் தாய்நாடு. இது ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்தது. அடிமை விலங்குகளைத் தகர்க்கப் பெரிய சுதந்திரப் போராட்டம் நடந்தது. அப்போது, இந்தியா நம் நாடு; நாம் அனைவரும் இந்தியர்; ஒரு தாய் வயிற்று மக்கள்; ஒரே குடும்பத்தினர் என்னும் எண்ணம் மலர்ந்தது; போராடிச் சுதந்திரம் பெற்றோம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டும்; நாம் இந்தியர்; நம் குடும்பம் இந்தியா என்னும் ஒருமைப்பாட்டு உணர்ச்சியோடு வளரவேண்டும்; வாழவேண்டும். இக்கருத்தைக் கொண்டுதான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.