இது என் ஐந்தாவது நாவல். 2019 இல் என் முதல் நாவல் வந்தது. இந்த நாவலில் பல திறப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள 38 அத்தியாயங்களில் பல இடங்களில் திறப்புகள் விரவிக் கிடக்கின்றன. இந்த நாவலில் கிளைக்கதைகளும் உட்கதைகளும் உள்ளன. இந்த நாவல் எழுதியது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. பெண்களின் வினோத அடையாளங்கள் நாவலுக்குப் புத்துணர்ச்சியையும் மாயத்தையும் தருகின்றன. ஶ்ரீநிவாச கோபாலனுக்கும் தேவேந்திர பூபதி, சுனில் கிருஷ்ணன், சிவராமன் ஜயபாஸ்கரன் ஆகியோருக்கும் என் நன்றி, கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு அனுஷ், சீனிவாசன் மற்றும் பணியாளர்களுக்கும் என் நன்றி.