இரவோடு இரவாக....
ஈகிள்ஸ் ஐயின் அதிரடியில் சாகசங்களும், யூகிக்க இயலாத திருப்பங்களும் நிறைந்த க்ரைம் த்ரில்லர்
வைஜயந்தி அந்த இடத்தில் தேடத் தொடங்கினாள். பார்வையால் இன்ச், இன்ச்சாக அந்தப் பிரதேசத்தை வருடினாள். நரேந்திரனும் தேடினான். அந்தப் பிரதேசம் பொதுவாக மனிதனின் இயற்கை உபாதை களைத் தீர்த்துக்கொள்ளப் பயன்பட்டிருக்கிறது என்பது தரையில் சுற்று முற்றும் பார்க்கும் போது மிகத் தெளிவாகத் தெரிந்தது. 'ஒய்ங்க' 'ஒய்ங்க்' என்று இரண்டு பன்றிகள் தத்தம் வா ல்களை ஹெலிகாப்டர் ஃபேன்களைப் போல் சுழலவிட்டுக்கொண்டு வெகு சுறுசுறுப்பாக தங்கள் வயிற்றுப்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தன . ப்ரேக்ஃ பாஸ்டா, லன்ச்சா என்று தெரியவில்லை.
டிடெக்டிவ் என்றால் எந்த மாதிரியான இடத்திற்கு எல்லாம் வர வேண்டி யிருக்கிறது பார் என்று நரேந்திரன் நினைத்துக்கொண்ட நேரத்தில் அவன் கவனத்தை ஒரு சாக்லேட் காகிதம் கவர்ந்தது.
சூரிய வெளிச்சம் எப்படியோ ஊடுருவி அந்தச் செவ்வகமான வெள்ளிச் சரிகை காகிதத்தின் மேல் பட்டுப் பிரதிபலித்தது. பிரதிபலித்த வெளிச்சம் ஏதோ ஒரு கோணத்தில் நரேந்திரனின் கண்களைத் தாக்கியது. நரேந்திரன் அதை நோக்கி நகர்ந்தான். அந்த பேப்பரைச் சுற்றி அரண் போல் மனித மற்றும் மிருகக் கழிவுகள்.
அது ஒரு சிறு முட்செடியில் குத்திப் படபடத்துக்கொண்டிருந்தது. மூங்கில் தோப்பிற்கும் அந்த செவ்வக பேப்பருக்கும் சம்பந்தமேயில்லை. குனிந்தான். வெகு எச்சரிக்கையுடன் அதை எடுத்தான். 'சூப்பர்மின்ட்' என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள். இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு நிவாரணி.
ஏ.ஸியிலோ இல்லை காரிலோ மின்ட் மணத்தை ஸ்ப்ரே செய்திருந்தார்கள். அதனால் காரில் அந்த பெப்பர்மின்ட் மணம் இருந்தது.
கல்யாணின் வார்த்தைகள். அப்படியானால் இந்த மின்ட் மிட்டாய் சுற்றிய பேப்பர் கொலைகாரன் தவறவிட்டதாகத்தான் இருக்க வேண்டும். டிடெக்டிவிற்கு என்று அடித்த அதிர்ஷ்டம்! நரேந்திரனுக்குச் சிலிர்த்தது.
அவன் பரபரப்பாக வைஜயந்தியின் பக்கம் திரும்பினான்.
அவள் ‘உவ்வே, உவ்வே' என்று பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்க்ரீம் அத்தனை யையும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.