மேலே சில கழுகுகள்
போலீசுக்கும் கீரிமினலுக்கும் ஆடுபுலி ஆட்டம் இந்த நாவல்
'ஒரு சிங்கிள் டீ போடுடா.."
ஒரு கான்ஸ்டபிள். பாண்ட்டுக்குள் வியர்த்தது. இவருக்குத் தெரியுமா? இதோ கையெட்டுகிற தூரத்தில் நான்.
பதினைந்து லட்ச ரூபாயைக்கொள்ளை அடித்து விட்டு ஒரு ஆளை பச்சைக் கொலையும் செய்து விட்டு, சூடாய் டீ அருந்திக் கொண்டிருக்கிறேன். விஷயம் தெரிந்தால் அவருடைய கண்கள் எப்படி வெளியே தெறித்து விழும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
அந்தக் கடுவன் பூனை இன்ஸ்பெக்டருக்கு, தான் மிகவும் புத்திசாலி என்ற நினைப்பு.
**********************
சவுக்குத் தோப்பு
செல்வா முருகேசனின் சாகசங்கள் நிறைந்த த்ரில்லர்
"செய்யாத கொலைக்காக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.."
"எதற்கு வீண் வளவளா? சவுக்குத் தோப்பு எங்கே?"
"என்னது?" "சவுக்குத் தோப்பு.."
"பாண்டிச்சேரி எனக்கு அதிகப் பழக்கமில்லை. மெட்ராஸில் என்றால், சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு சவுக்குத் தோப்பு இருக்கிறது. அப்புறம் மகா பலிபுரம் போகிற வழியில் ஒன்றிரண்டு சவுக்குத் தோப்பு இருக்கிறது என்று ஞாபகம்.."
அவன் கையைக் குவித்து கீழிருந்து பாய்ச்சி னான். என் தாடை சப்பக் என்று முதலை வாய் போல் மூடிக்கொண்டது.