காற்றில் கரைந்தவன்
செல்வா முருகேசன் கூட்டணி தூள்பறத்தும் கீரைம் த்ரில்லர்.
அவர்கள் கீழே கதவைத் திறக்கும் ஒலி கேட்டது. அபிநயா மேலே வந்துவிட்டால் அப்புறம் என்னால் அவள் பெட்டிகளை ஆராய முடியாது என்று தெரிந்தது. அவசரம் அவசரமாக என் பென் டார்ச்சைப் பயன்படுத்தி அந்த வெளிச்சத்தில் இரண்டாவது பெட்டியை அலசி மூடி கட்டிலுக்குக் கீழே தள்ளினேன். மூன்றாவது பெட்டியை நான் எடுத்து கட்டிலில் வைத்தபோது, ஹாலில் ஸ்விட்ச் தட்டும் ஒலி கேட்டது. காலி செய்யப்படத் தயாராயிருந்த வீடு என்பதால் சின்னச் சின்ன ஒலிகள்கூட எதிரொலித்தன.
காதுகளை வெளியே வைத்து, கண்களைப் பெட்டிக்குள் செலுத்திய எனக்கு நிறைய ஆச்சரியங்கள் தென்பட்டன. அந்தப் பெட்டியையும் மூடினேன். கட்டிலுக்குக் கீழே செலுத்... என்ன இது? கட்டிலின் இடது காலில் தீற்றப்பட்டிருந்த ரத்தம் என் கவனத்தைக் கவர்ந்தது.
******************
இரண்டாவது ஒற்றன்
ராணுவப் பின்னணியில் திருப்பங்கள் நிறைந்த க்ரைம் த்ரில்லர்.
"ஸில்லி! இந்த தேசம், அந்த தேசம் என்பதெல்லாம் நாமாக வரையறுத்துக் கொண்ட எல்லைகள். பூமி உருண்டையில் நாம் போடும் ஒழுங்கற்ற கோடுகள். ஒவ்வொரு எல்லைக்குள் இருக்கும் பிரதேசத்தையும் நாம் வேறு வேறு பெயர் சூட்டி அழைக்கிறோம். அந்தந்தப் பிரதேசத்துக்கு விசுவாசமாக இருக்கச் சொல்லி உபதேசிக்கப்படுகிறோம். நான் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அந்நாட்டுப் பிரஜை. அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். சீனாவில் என்றால் அதற்கு. அமேரிக்கா என்றால் அதற்கு.
"மொத்தத்தில் நம் வாழ்நாள் முழுமைக்கும் யாருக்காவது அடிமையாக இருந்தே தீரவேண்டும். இது எந்த கீதையில் உபதேசிக்கப்பட்டிருக்கிறது? இந்த தேசத்துக்காக உழை, உழை என்று எவ்வளவு உழைத்தாலும் இது எனக்கு என்ன செய்யும்?