ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடம். எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்கலாம். வெற்றி பெற்றவர்களின் வரலாறு நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது.
காலத்தை வென்று சரித்திரத்தின் பக்கங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். மனித சமூகத்தின் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்ட விஞ்ஞானிகள், உலகின் அறியாத பகுதிகளைக் கண்டறிந்த கடலோடிகள், விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், தொழில் துறையில் சாகசம் செய்த பிரமுகர்கள், விண்ணில் சாதனை புரிந்தவர்கள், புரட்சியாளர்கள் ஆகிய சிலரின் வரலாறுகள் சுருக்கமாக, மாணவர்களின் மொழியில் தரப்பட்டுள்ளன. இதே சாதனையாளர்களின் வரலாற்றை முழுமையாகப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை இந்நூல் தூண்டும்.