'பாரதியார் கட்டுரைகள்' என்னும் இந்நூல். இந்நூல் வாயிலாய் பல உண்மைகளை அறியலாம். ஒன்று, இந்நூல் காலப்பெட்டகமாய் இருந்து அக்கால மக்களின் நிலையை அறியப் பயன்படுகிறது. இரண்டு, மிகக் குறைந்த சாதன வசதி இருந்த அக்காலத்திலே, பிறரைவிட எவ்வளவு கூர்த்த, விரிந்த மதிபடைத்தவனாய் பாரதி இருந்தான் என்பதையும் நன்கு அறிய முடிகிறது. மூன்று, 'தமிழ் உயர வேண்டும்; தமிழ் மக்கள் உயர வேண்டும்; இந்தியா உயர வேண்டும்' என்னும் பாரதியின் ஆசை, பெரும்பாலான கட்டுரைகளில் அடிநாதமாய் ஒலிப்பதை அறியலாம்.