நவீன காலத் தொடக்கத்தில் மறுமலர்ச்சி, சமயச் சீர்திருத்தம், எதிர்சமயச் சீர்திருத்தம் ஆகியவற்றால் மக்கள் விழிப்புணர்ச்சியடைந்தனர். அமைதியும் வளமும் வேண்டுமென மக்கள் விரும்பினர்; சமயக் கொடுமைகள் ஒழிய வேண்டுமென உணரத் தொடங்கினர். நல்ல வேளையாக ஐரோப்பாவில் 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை வல்லாட்சியாளர்கள் ஆட்சி தொடங்கியது. அவர்கள் அறிவும் திறமையும் கொண்டிருந்ததால் அவர்கள் வாழ்ந்த காலம் 'ஒளிமிகு வல்லாட்சியாளர்கள் காலம்' என வரலாற்றில் குறிக்கப்படுகிறது.