சென்னையின் சின்னம்!
சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகதுக்கு மாறுகின்றன! வரலாற்றுப் புகழ்பெற்ற செயின் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது.
சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்கார்ர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்கார்ர்களும் டச்சுக்கார்ர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை. வளரத்தான் செய்தது. ஆங்கிலேய் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆம்பித்துவைத்தது வரலாற்றினே வேடிக்கை.
சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான்.
இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட்கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக்கொண்டும் அது வெடிக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது! இதைப் போன்ற பல அபூர்வ சம்பவங்களைத் தொகுத்து, விறுவிறுப்பு குறையாமல் எழுதி, பழைய வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நூலாசிரியர் ப. திருமாவேலன்.
அருமையான பல பழைய படங்கள் நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. உங்கள் இதயக் கோட்டையில் இந்த நூல் அறிவுபூர்வமான தடம் பதிக்கும் என்பதில் ஐயமில்லை.