இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் புகழிக்காகவும் என்ன வேண்டுமானாலும் எழுதுகிற, எதை வேண்டுமானலும் செய்கிற, எப்படி வேண்டுமானலும் வாய்கிற காலம் இது.இந்தக் காலத்தில் எஸ். ராமகிருஷணன் போன்றோர் பற்றிய செய்திகள் நம்புவதற்கே கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த வரலாற்று உண்மைகள் இளைய தலைமுறைக்கு நிறையச் சொல்லப்பட வேண்டும். உயர்ந்த வாழ்வியல் நெறிகளின் மரபை இளைஞர்களிடம் நாம் மறுபடித் தோற்றுவிக்க வேண்டும். உயர்தரமான இந்தியா உருவாக வேண்டுமானால் முதலில் உயர்தரமான மனிதர்கள் உருவாக வேண்டும். அத்தகைய வருங்காலத் தலைமுறையை உருவாக்குவதில், பெரிதும் கடந்த காலத்தைப் பற்றிய இந்நூல் கட்டாயம் உதவும்.